காங்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு

0
354

-பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் பங்கேற்பு-

32796154_1718981734837966_5592042974100848640_n(ஏ.எல்.டீன் பைரூஸ்)

மட்டக்களப்பு மன்முனை மேற்கு காங்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சுந்தர மோகன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் கலந்து கொண்டு 120,000.00 பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரத்தை பாடசாலை சமூகத்தினரிடம் கையளித்தார்.

நிகழ்வின் விசேட அதிதயாக மன்முனை மேற்கு வலயக் கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியா, மன்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு விஸ்வகாந்தன், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பொறியியலாளர் சிப்லி பாறூக் உரையாற்றுகையில்,

காங்சிரங்குடா பகுதிவாழ் மக்கள் குடிநீர் தட்டுப்பாடுடன் வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தியை தொலைக்காட்சி ஊடாக பார்த்த பின்பு அந்ந கிராமத்து மக்களின் குடிநீர் தேவையினை எவ்வாறாயினும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற நொக்கில் அங்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்த பின்னர் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் 150,000.00 பெறுமதியான இரண்டு கிணறுகளை எம்மால் கட்டடிக் கொடுக்க முடிந்தமையிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான சந்தர்பங்களின் போதுதான் காங்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றின் தேவைப்பாடு உள்ளதாக பாடசாலை அதிபர், ஆசிரியர் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்ககையினையும் எம்மால் இன்று நிறைவேற்ற முடிந்துள்ளதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் இதன் போது தெரிவித்தார்.

32599582_1718981774837962_2072804431694397440_n

LEAVE A REPLY