றிதிதென்ன மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கான ஓலி பெருக்கி சாதானம்; பொறியியலாளர் சிப்லி பாறூக்கினால் வழங்கி வைப்பு

0
312

(காத்தான்குடி டீன்பைரூஸ், எம்.ரீ. ஹைதர் அலி)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட றிதிதென்ன – புனானை மஸ்ஜிதுந் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கையளிக்கும் நிகழ்வு அன்மையில் மஸ்ஜிதுந் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றபோது இதில் பிரதம விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு ஒலி பெருக்கி சாதனங்களை நிருவாக சபையினரிடம் கையளித்தார்.
புனித ரமழான் மாதத்தின் மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடாக இருந்த ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுத்தந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு மஸ்ஜிதுந் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாக சபையினர் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள மஹல்லாவாசிகள் அனைவரும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத் தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி அவர்களும் கலந்துகொண்டார்.
கடந்த வருடம் றிதிதென்ன கிராமத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டபோது இப்பள்ளிவாசல் நிருவாக சபையினரால் ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், தனது சொந்த நிதியிலிருந்து அப்பள்ளிவாசலுக்கு தண்ணீர் அருந்தும் குளிரூட்டி ஒன்றினையும் அன்றைய விஜயத்தின்போது பெற்றும் கொடுத்தார்.
அத்துடன், கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின்போது ஐ ரோட் எனும் திட்டத்தினூடாக வீதிகளை தெரிவுசெய்து காபட் விதிகளாக செப்பனிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தெரிவில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதான வீதி பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால்  உள்வாங்கப்பட்டுள்ளதுடன், ஐ ரோட் திட்டம் அமுல்ப்படுத்தப்படும்போது இவ்வீதியும் காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
இப்புனித மாதமான ரமழான் மாதத்தில் நம் அனைவரினதும் பாவங்களையும் மண்ணித்து நாம் ஏனையவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக…

DSC00912 DSC00915

LEAVE A REPLY