சவூதியினால் இது­வரை பேரீச்சம்பழம் வழங்­கப்படவில்லை; 250 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் சதொச ஊடாக கொள்வனவு

0
373

முஸ்­லிம்­களின் நோன்­பு­கால பாவ­னைக்­காக 250 மெற்றிக் தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை சதொச ஊடாக மத்­தியகிழக்­கி­லி­ருந்து உட­ன­டி­யாகக் கொள்­வ­னவு செய்து விநி­யோ­கிப்­ப­தற்கு நேற்று முன்தினம் (15) அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இறக்­கு­மதி செய்­யப்­படும் பேரீச்­சம்­பழம் வழமை போன்று நாடெங்­கு­முள்ள பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்கள் ஊடாக முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக விநி­யோ­கிக்­கப்­படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

சவூதி அரே­பிய அரசு வரு­டாந்தம் இலங்­கைக்கு அன்­ப­ளிப்­பாக வழங்கி வரும் பேரீச்­சம்­பழம் இவ்­வ­ருடம் இது­வரை வழங்­கா­மை­யி­னை­ய­டுத்து அரச செலவில் பேரீச்­சம்­ப­ழத்தை கொள்­வ­னவு செய்து விநி­யோ­கிப்­பதற்கான அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியைக் கோரி நேற்று அமைச்சர் அவைக்கு சமர்ப்­பித்த அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஏற்­றுக்­ கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் ஹலீம் இது தொடர்பில் மேலும் கருத்து தெரி­விக்­கையில்இ

சவூதி அரே­பி­யாவின் நன்­கொ­டை­யான பேரீச்­சம்­ப­ழத்தை காலம் தாழ்த்­தாமல் வழங்­கு­மாறு கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பே கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது என்­றாலும் சவூதி அரே­பி­யாவில் பேரீச்­சம்­பழ உற்­பத்­தியில் குறைவு ஏற்­பட்­டுள்­ள­மையே வழங்­கப்­ப­டா­மைக்குக் காரணம் எனக் கரு­து­கிறோம் என்றார்.

கடந்த வருடம் சவூதி அரே­பியா அரசு இலங்­கைக்கு 150 மெட்­ரிக்தொன் பேரீச்­சம்­ப­ழத்தை நன்­கொ­டை­யாக வழங்­கி­யி­ருந்­தது. அந்தக் தொகை பற்­றாக்­குறை கார­ண­மாக சதொச ஊடாக 150 மெட்­ரிக்தொன் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் தொடர்­பான இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் முஸ்­லிம்­க­ளுக்கு நோன்பு காலத்தில் பேரீச்­சம்­ப­ழத்தின் அவ­சியம் மற்றும் சவூதி நன்­கொடை கிடைக்­காமை பற்றி தெளி­வு­ப­டுத்தி யிருந்­தனர். இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சதொச ஊடாக பேரீச்­சம்­ப­ழத்தை கொள்­வ­னவு செய்­வ­தற்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரீச்சம்பழம் உடனடியாக இறக்குமதி செய்யப்பட்டு ஒருவார காலத்துக்குள் பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

(Vidivelli)

LEAVE A REPLY