நோன்பு நோற்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் உதவுங்கள்

0
490

அநுராதபுரம் மாவட்டத்தின், ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கற்று பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை உருவாக்கும் நோக்கில் இயங்கி வரும் முக்கரவெவ, றஷீதிய்யா அறபுக் கல்லூரியில் வழமைபோல் இவ்வருடமும் ரமழான் விடுமுறையில் கல்லுரியின் க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) மற்றும் ஹிப்ழ் பிரிவு மாணவர்களுக்கான விசேட மேலதிக வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே புனித ரமழானில் இம்மாணவர்களுக்கான நோன்பு நோற்பதற்கும், நோன்பு திறப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து தருமாறு செல்வந்தர்களிடம் கல்லூரியின் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீங்களும் புனித ரமழான் மாதத்தில் இம்மாணவர்களுக்கு உதவிகளை செய்து அதிகமாக நன்மைகளை பெற்றுக் கொள்ள விரும்பினால் அழையுங்கள்.

பணிப்பாளர்: 0773696498
தலைவர்: 0777164676
செயலாளர்: 0774939888

“உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்…..”
(அல்குர்ஆன்- 63:10)

ஹொரவ்பொத்தான நிருபர்
முஹம்மட் ஹாசில்

LEAVE A REPLY