றமழான்கால இரவு நேர வணக்க வழிபாடுகள் தொடர்பாக… காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

0
575

அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர்,
السلام عليكم ورحمة الله وبركاته

மேற்படி விடயம் சம்பந்தமாக 2018.05.15ஆம் திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா, வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டன என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

01. புனித றமழான்கால அமல்களில் ஒன்றான இரவு நேரத்தொழுகைகளை வர்த்தகர்கள், வர்ததக ஊழியர்கள் அனைவரும் தொழ வேண்டும் என்பதற்காக அனைத்து வர்ததக நிலையங்களையும் இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரை கட்டாயமாக மூடி, சகலரும் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஏற்பாடுகளைச் செய்தல்.

02. சகல பள்ளிவாயல்கலும் இரவு இஷாத் தொழுகையை 9:00 மணிக்கு ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து இரவுநேர வணக்க வழிபாடுகளை நடாத்துதல்.
எனவே, மேற்படி விடயங்களை அனைத்து பொதுமக்களும் பின்பற்றி புனித றமழானின் பாக்கியத்தை அனைவரும் அடைந்துகொள்வோமாக!
جزاك الله خيرا

குறிப்பு: சகல பள்ளிவாயல்களும் மேற்படி நடைமுறைகளைப் பின்பற்றி தங்களது பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகைகளை நடாத்துமாறும். இவ்வறிவித்தலை பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புச் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY