இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
194

மண்முனைப்பற்று ஆரயம்பதி பிரதேச செயலகத்துக்குற்பட்ட பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (14) திங்கட்கிழமை செயலக திட்டமிடல் பணிப்பாளர் குணரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் ஆரியம்பதி பிரதேச சபை உறுப்பினர்களான றஸீம் மற்றும் நஸீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் ‘திவியட உதான’ வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

DSC_0153

LEAVE A REPLY