காத்தான்குடி நகர சபை தவிசாளர் தலைமையிலனா குழு சிங்கப்பூர் பயணம்

0
352

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபை தவிசாளர் தலைமையிலனா குழுவினர் இன்று (14) சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளனர்.

‘திண்மக் கழிவு முகாமை செய்தல்’ எனும் செயற்றிட்ட, கள கற்கைநெறிக்காகவே இவர்கள் சிங்கப்பூருக்குச் பயணமாகியுள்ளனர்.

‘சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுசரணையுடன், சூழல் சுற்றாடல் அமைச்சும் அங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களும் இணைந்து, திண்மக் கழிவகற்றலை முகாமைத்துவம் செய்வதில் வினைத்திறனுடன் செயலாற்றி, உலகுக்கு முன்னுதாரணம் மிக்கதாய்ச் செயற்படுத்திக் காட்டியுள்ளன.

அந்தச் செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் படிப்பினைகளுடன் நடைமுறைச் சாத்தியமானவற்றை தெரிந்து கொள்வதற்காகவுமே சிங்கப்பூர் செல்வதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர தவிசாளர் அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களாக எம்.ஜவாஹிர், ஏ.எல்.பௌமி, ஏ.அமீர் அலி ஆகியோரும் இரண்டு நகர சபை உத்தியோகத்தர்களும் இக்குழுவில் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY