காய்ச்சல் காரணமாக கிண்ணியா பாத்திமா சஹானா வபாத்! இன்னாலில்லாஹ் …

0
248

(அப்துல் சலாம் யாசீம்)

காய்ச்சல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 20 வயது யுவதி சிகிச்சை பலனின்றி இன்று (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவ்வாறு வபாத்தான யுவதி கிண்ணியா, அண்ணல் நகரைச் சேர்ந்த என்.பாத்திமா சஹானா (20 வயது) எனவும் தெரிய வருகின்றது.

குறித்த யுவதி நான்கு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் நீரிழிவு நோய் அதிகமாக காணப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அத்துடன் யுவதி உளநலம் பாதிக்கப்பட்டவரெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் ஜனாஸா, விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY