காத்தான்குடியில் பாடசாலை நாட்களில் கணரக வாகனங்கள் கல் மண் ஏற்றிய லொறிகள் காலை வேளையில் உள் வீதிகளுக்குள் செலவது தடை

0
341

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் பாடசாலை நாட்களில் கணரக வாகனங்கள் கல் மண் ஏற்றிய லொறிகள் காலை வேளையில் உள் வீதிகளுக்குள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடியில் பாடசாலை நாட்களில் கல் மண் என்பன ஏற்றிய லொறிகள் கணரக வாகனங்கள் காலை வேளையில் உள்ளக வீதிகளுக்குள் செல்வதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் விபத்;துக்களும் இடம் பெறுவதாகவும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இதையடுத்து இந்த விடயம் காத்தான்குடி நகர சபையின் விஷேட அமர்வில் கலந்துரையாடப்பட்டு பாடசாலை நாட்களில் கணரக வாகனங்கள் கல் மண் ஏற்றிய லொறிகள் காலை வேளையில் உள் வீதிகளுக்குள் செல்வது தடை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காத்தான்குடி நகர சபை பிரிவில் பாடசாலை நாட்களில் காலை 6 மணி முதல் காலை 8மணி வரை கணரக வாகனங்கள் கல் மண் ஏற்றிய லொறிகள் உள் வீதிகளுக்குள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் அறிவித்தார்.

LEAVE A REPLY