போதை வஸ்த்துக்களை ஒழிப்பதற்கான செயலணியொன்று காத்தான்குடியில் ஆரம்பிப்பு

0
242

(விஷேட நிருபர்)

போதை வஸ்த்துக்களை ஒழிப்பதற்கான செயலணியொன்று காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் போதை வஸ்த்துக்களை ஒழிப்பது தொடர்பான உயர் மட்டக் கூட்டமொன்று காத்தான்குடி நகர சபை கட்டிடத்தில் சனிக்கிழமை (12.05.2018) நடைபெற்ற போதே இந்த செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை தவிசாளரை தலைவராக கொண்ட இந்த செயலணியில் காத்தான்குடி பிரதேச செயலாளர் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், காத்தான்குடி கோட்டக்கல்விப்பணிப்பாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர், மற்றும் சில சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகளை உள்ளடக்கியதாக இந்த செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபை தவிசாளர் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணி மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதுடன் ஒரு வருட காலத்திற்குள் இந்த போதை வஸ்த்துக்களை ஒழிக்கும் நடவடிக்கையினை இந்த செயலணி மேற் கொள்ளவுள்ளது.

இதற்காக காத்தான்குடி நகர சபையினால் ஹொட் லைன் தொலை பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது இன்னும் ஓரிரு வாரத்திற்குள் இந்த இலக்கத்தை நாம் அறிவிக்கவுள்ளோம்.

அந்த இலக்கத்தை மக்கள் மயப்படுத்துவதுடன் மக்கள் அந்த தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு போதை வஸ்த்து விற்பணையாளர்கள் மற்றும் பாவணையாளர்கள் தொடர்பான விபரங்களை வழங்க முடியும்.

அத்தோடு காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பத்து வட்டாரங்களிலுமுள்ள நகர சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்களும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர், காத்தான்குடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதி நதிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகள் மற்றும் சில சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSCN0536 DSCN0538 DSCN0540 DSCN0542

LEAVE A REPLY