22 தேக்கு மரக்குற்றிகளுடன் கந்தளாயில் ஒருவர் கைது!

0
127

(அப்துல் சலாம் யாசீம்)

அனுமதிப்பத்திரமின்றி கெப் வாகனமொன்றில் தேக்கு மரக்குற்றிகளை கொண்டு சென்ற சாரதியை நேற்றிரவு (12) கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ரஜஎல பகுதியிலிருந்து தொழிற்சாலையொன்றுக்கு 22 தேக்குமரக் குற்றிகளை EP PP-1184 எனும் இலக்க கெப் வாகனத்தில் கொண்டு செல்லும் போது கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கே.அப்புஹாமிலாகே சுசந்த கலுபோவில (38 வயது) எனவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட நபரை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY