ஏறாவூர் ஆதார வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா வினால் சுகாதார பிரதி அமைச்சரிடம் திட்ட முன்மொழிவு சமர்ப்பிப்பு

0
117

(முகம்மட் அஸ்மி)

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்ற அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மெளலானா மற்றும் சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காசிமிற்கும் இடையிலான அபிவிருத்திகள் தொடர்பான சந்திப்பு நேற்று முன்தினம் (10) வியாழக்கிழமை சுவசிறிபாயவில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையை 500 மில்லியன் நிதியில் முழுமையாக அபிவிருத்தி செய்வதுடன் அங்கு சத்திரசிகிச்சை கூடம் அடங்கலான நவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும், ஏறாவூர் ஆயுர் வேத வைத்தியசாலையை தரம் உயர்த்துமாரும் சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிமை நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுத்ததுடன், குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவுகளையும் பிரதி அமைச்சரிடம் கையளித்தார்.

குறித்த சந்திப்பின் போது சுகாதார அமைச்சின் தேசிய ஆயுர்வேத பிரிவின் மேலதிக செயலாளர் திலகரட்ண, மற்றும் அமைச்சரின் சுகாதாரத்துறை இணைப்பாளர் Dr. சிஹான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2018-05-11 at 14.52.34

LEAVE A REPLY