உதவி பொலிஸ் பரிசோதகரை கொலை செய்தவருக்கு ஆயுள் கால சிறை தண்டனை

0
404

(அப்துல் சலாம் யாசீம்)

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஆலங்கேணி பகுதியில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சுட்டுக்கொன்ற முதலாவது எதிரிக்கு ஆயுள் கால சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டார்.

2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி கிண்ணியா ஆலங்கேணி பொலிஸ் காவலரனுக்கு அருகில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மரணம் விளைவித்தமை தொடர்பில் கிண்ணியாவைச்சேர்ந்த இரண்டு பேரும் புலியங்குளம் பகுதியைச்சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை 2003ம் ஆண்டு சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு குறித்த வழக்கு மட்டக்களப்பில் இயங்கி வந்த கிழக்கு மாகாண மேல் நீதிமன்றத்திலும் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திலும் விளக்கம் இடம் பெற்று வந்துள்ளது.

குறித்த வழக்கின் இரண்டு எதிரிகள் சமூகமளிக்காத நிலையில் மூன்றாவது எதிரி மட்டும் சமூகமளித்திருந்த நிலையில் விளக்கம் இடம் பெற்றுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கில் பெயர் குறிக்கப்பட்ட 01ம் எதிரி குற்றச்சாட்டுக்கு குற்றவாளி என காணப்பட்டு ஆயுள் கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய இரண்டு எதிரிகளும் குற்றமற்றவர்கள் என காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தண்டனை விதிக்கப்பட்ட எதிரி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கொலையின் ஆயுள் கால சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் இளைஞரொருவர் எனவும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY