பலஸ்தீன ‘நக்பா’ தின நிகழ்வுகளை முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கிறார்

0
353

israel-introduces-restrictions-ahead-of-nakba-day22692_L(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை குழுவும் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தைக் குறிக்கும் நக்பா தின நிகழ்வுகள் இன்று (14) திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறுவதாக கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகம் அறிவித்தள்ளது.

நக்பா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாளை காலை 9 மணிக்கு கொழும்பு-7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரக வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் முச்சக்கர வண்டிப் பேரணியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்தப் பேரணி காலி முகத்திடல் வழியாகச் சென்று மீண்டும் பலஸ்தீன தூதரகத்தை வந்தடையவுள்ளது.

இதேவேளை, நக்பா தினத்தைக் குறிக்கும் விசேட நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சிறப்புரையாற்றவுள்ளார்.

இந் நிகழ்வில் மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன் இதன்போது பலஸ்தீன மக்களின் அவலங்களை சித்திரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

மேலும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கையொப்பம் சேகரிக்கும் மற்றொரும் நிகழ்வும் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷ ஆரம்பித்து வைக்கவுள்ளார்.இந் நிகழ்வு 16 ஆம் திகதி வரை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு தொடரும் என பலஸ்தீன தூதரகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY