நீரிழிவினால் 5 செக்கனுக்கு ஒருவர் பாதிக்கப்படுவதுடன் 10 செக்கனுக்கு ஒருவர் உயிரிழப்பு

0
258

(விஷேட நிருபர்)

நீரிழிவினால் 5 செக்கனுக்கு ஒருவர் பாதிக்கப்படுவதுடன் 10 செக்கனுக்கு ஒருவர் உயிரிழப்பதாக வைத்திய நிபுணர் டாக்டர் எம்.அருளானந்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (08) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நீரிழிவு தொடர்பான விழிப்புனர்வு கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய அவர் நீரிழிவு ஒரு நோயல்ல. அது சமூகப்பிரச்சினையாகும்.

2018ம் ஆண்டில் உலகத்தில் 429 மில்லியன் பேர் நீரிழிவினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

2045ம் ஆண்டளவில் உலகில் 90 வீதமானவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவினால் 5 செக்கனுக்கு ஒருவர் பாதிக்கப்படுவதுடன் 10 செக்கனுக்கு ஒருவர் உயிரிழப்பதுடன் 30 செக்கனுக்கு ஒருவர் கால் கைகளை இழக்கின்றனர்.

உடற்பயிற்சி உணவுப்பழக்க வழக்கங்கள் என்பவற்றால் இந்த நீரிழிவிழியினை கட்டுப்படுத்த முடியும்.

அரச அதிகாரிகள் இணைந்து இது பற்றி மக்களுக்கு விழிப்பூட்டல் வேண்டும்.

நமது உணவு நடைமுறைகள் மாற்றம் பெற்று விட்டன. அதனை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். கலாசாரம் அதன் நடைமுறைகள் எல்லாம் உடல் திறன் மேம்பாடுகள் சுகாதர நடைமுறைகளுடனேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY