காத்தான்குடியில் ரமழான் தொழுகை நேரத்தில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு வேண்டுகோள்

0
519

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் புனித ரமழான் நோன்பு மாதத்தில், இரவு நேர விசேட தொழுகைக்காக, இரவு 8.45 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை மூடுமாறு, காத்தான்குடி வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம் ஆகிய நிறுவனங்களுக்கு, இவர்களின் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 17ஆம் திகதி புனித ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் வியாபார நிலையங்களைத் திறந்துவைப்பதால், தறாவீஹ் எனப்படும் இரவு நேர விசேட தொழுகை இல்லாமல் போய்விடுகிறது எனவும், இதனால் அசௌகரியமடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புனித ரமழான் காலத்தில், இரவு நேரத் தொழுகையை வலியுறுத்தியுள்ள அவர்கள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு கோரியுள்ளனர்.

LEAVE A REPLY