வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வு; இருவர் கைது

0
163

(வாழைச்சேனை நிருபர்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு வௌவேறு இடங்களில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரமும், இரண்டு சாரதியையும் நேற்று (08) செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினரினால் வாகனேரி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த ஒரு உழவு இயந்திரமும், ஒரு சந்தேக நபரையும் காவத்தமுனை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்தோடு கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நிலையில் ஒரு உழவு இயந்திரமும், ஒரு சந்தேக நபரையும் கிரான் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை, புலியாந்தகல் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சட்டவிரோத மண் அகழ்வை தடுக்கும் முகமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

01 (1) 01 (3) 01 (4)

LEAVE A REPLY