திருகோணமலை வளாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது: திருமலை வளாக முதல்வர் வி.கனகசிங்கம்!

0
74

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் முகாமைத்துவ பீடத்தின் ஓரு சில மாணவர்களால் இன்று(9) திருகோணமலை நகரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது திருகோணமலை வளாக முதல்வர் வி.கனகசிங்கம் தெரிவித்தார்.

திருகோணமலை வளாக மாணவர்களுக்கு கூடிய வசதி வாய்ப்புக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மாணவ விடுதி நூலகம் இவ்வாறு பல வசதி வாய்ப்புகள் பல மில்லயன் ரூபா செலவில் மாணவர்களுக்கு எற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று குறித்த சில மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வித அனுமதியுமின்றி நடாத்தப்பட்டுள்ளது.

பல்கலைகழக மாணவர்களால் நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நியாயமற்றது. அவர்களது கோரிக்கைகள் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது. அது தொடர்பில் பல்கலைக்கழகத்திற்க வருகை தந்து நோக்க முடியும். பல்கலைகழக கல்வி நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருவதாக திருகோணமலை வளாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY