அனுராதபுரம் திறப்பனை விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு திறப்பு விழா!

0
120

(அஸீம் கிலாப்தீன்)

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, அனுராதபுரம், திறப்பனை பிரதேச சபைக்குட்பட்ட நாச்சியாதீவு கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு, கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மக்கள் காங்கிரஸின் தவிசாளருமாகிய அமீர் அலியினால் கடந்த சனிக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான ஹிஜாஸ், நளீம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஹீட் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான தாரிக், அமானுல்லாஹ் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, நாச்சியாதீவில் பதிவு செய்யப்பட்டுள்ள சில விளையாட்டு கழகங்களுக்கு இஷாக் ரஹுமான் எம்.பியின் சொந்த நிதியிலிருந்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

1 2

LEAVE A REPLY