ஆபத்தான நிலையில் உள்ள பிரதான மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்றினார் கிண்ணியா நகர சபை செயலாளர்

0
320

ஹஸ்பர் ஏ ஹலீம்) 

கிண்ணியா நகர சபை வளாகத்தில் பல வருட காலமாக ஆபத்தான நிலையில் உள்ள பிரதான மின் மாற்றியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள்  நேற்று (07)வெற்றியளித்துள்ளது.

இதனை கடந்த மூன்று மாத காலமாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் அவர்களின் முயற்சியால் இம் மின் மாற்றியை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன இதனை தொடர்ந்து இலங்கை மின்சார சபையினால் நகர சபையின் செயலாளர் நௌபீஸின் வேண்டுகோளிற்கிணங்க நேற்று  (07)நகர சபை வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றியை புதிய ஆபத்தற்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ள மின் மாற்றியை நகர சபைக்கு வெளியில் வீதியின் அருகாமையில் நடுவதற்கான ஏற்பாடுகளை மின் கம்பம் மூலமான ஆரம்ப வேலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த பல வருட காலமாக கிண்ணியா நகர சபையின் வளாகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் ஆபத்தான நிலையிலும் சேதமடைந்தும் இம் மான் மாற்றி காணப்பட்டது

இதனை தொடர்ந்து சக ஊழியர்கள் இவ் ஆபத்துக்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது பலத்த பயத்துடனையே இவ் வளாகத்தில் இம் மின் மாற்றியினால் அன்றாடம் சக ஊழியர்களை கடமைகளை நிறைவேற்றி வந்திருந்தனர்

இதனை உடனடியாக மாற்றுவதற்கான முயற்சிகளை செயலாளர் இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மாவட்ட பொறியியலாளர் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இது சாதகமாக மாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளித்துள்ளது என நகர சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கான முழுமையான மின் மாற்றிக்கான வேலைத் திட்டம் மிக விரைவில் முடிவடையும் எனவும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் மேலும் தெரிவித்தார்.

IMG-20180507-WA0009 IMG-20180507-WA0017 IMG-20180507-WA0015 IMG-20180507-WA0012 IMG-20180507-WA0006

LEAVE A REPLY