முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சந்தித்த யாழ் முஸ்லீம் சமூக பிரதிநிதிகள்

0
242

பாறுக் ஷிஹான்

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் யாழ் முஸ்லீம் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று(7) இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் சம்பந்தமாகவும் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன் போது யாழ் கிளிநொச்சி ஜம்மியத்துல் உலமா சபை கிளைத்தலைவர் உட்பட யாழ் மாவட்ட முஸ்லீம் அமைப்புக்கள்
பள்ளிவாசல் நிர்வாகிகள் மாநகர சபை உறுப்பினர் நிபாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் போதை வஸ்து ஒழிப்பு சம்மந்தமான மகஜர் ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கபட்ட அதே வேளை முதலமைச்சரினால் போதைப்பொருள் கட்டுப்படுத்தும் உறுதிமொழியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

w (1) w (3) w (5)

LEAVE A REPLY