காத்தான்குடியில் முச்சக்கர வண்டி சாரதிகளின் மே தின ஊர்வலம்

0
231

(விஷேட நிருபர்)

காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின ஊர்வலம் காத்தான்குயில் இன்று (07) திங்கட்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி பொலிஸ்; நிலையத்தின் முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் காத்தான்குடி பிரதான வீதி, ஊர்வீதி வழியாக காத்தான்குடி கடற்கரையை சென்றடைந்தது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், எம்.மஹ்மி, ஏ.எல்.இல்மி அகமட் லெவ்வை உட்பட காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தனர்.

DSCN0295 DSCN0298

LEAVE A REPLY