வடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல்; 45 பேர் உயிரிழப்பு

0
156

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அந்த கிராமங்களை பாதுகாப்பதற்காக அப்பகுதியை சேர்ந்தவர் ஒரு குழுவை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், கடுனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் இன்று ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதோடு பல வீடுகளுக்கு தீவைத்தனர்.

இந்த தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்கள், அப்பகுதியில் உடனடியாக ராணுவம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் பிர்னின் கிவாரி பகுதியில் உள்ள சுரங்கத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Maalaimalar)

LEAVE A REPLY