ஹொரவ்பொத்தான, திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலம் ஓர் வரலாற்று சாதனை!!

0
375

கெபித்திகொல்லேவ கல்வி வலய பாடசாலைகளுக்கிடைலான தமிழ் மொழித்தின போட்டி நேற்று முன்தினம் (05) ஆ/வீரச்சோலை முஸ்லிம் மஹா வித்தியாலயதில் நடைபெற்றது.

இப்போட்டியில் திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலய மாணவர்களான A.M.அம்ஜத் (தனி இசை), M.T.M.முப்ளிஹ் (பாவோதல்), M.F.அஸ்கா (பேச்சு) ஆகியோர் 1ம் இடங்களையும், குழு நிகழ்ச்சிகளான நாடகம், பக்கீர் பைத் என்பன 1ம் இடத்தையும், நாட்டார் பாடல் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுதாக பாடசாலையின் அதிபர் ஜனாப். ஜப்பார் குறிப்பிட்டார்.

திம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலய பாடசாலை வரலாற்றில் சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர் வலயமட்ட தமிழ் மொழித்தின போட்டியில் இவ்வாறான ஓர் பெறுபேறு பெற்றுக்கொள்வது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதால் இதனை பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாக பதியப்படுவதாக பாடசாலையின் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

ஹொரவ்பொத்தான நிரூபர்,
முஹம்மட் ஹாசில்.

2018-05-06_11.20.50

LEAVE A REPLY