கஞ்சா கட்டுடன் கைதான 17 வயது பௌத்த பிக்குவை எச்சரித்து விடுவித்த பொலிஸார்

0
782

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மொறவெவ பிரதேச பொலிஸாரினால் முற்சக்கர வண்டியில் கஞ்சா கட்டொன்றை கொண்டு சென்ற 17 வயதுடைய பௌத்த பிக்குவை கைது செய்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த வேளை மொறவெவ பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.

ஹொரவ்பொத்தானை முற்சக்கர வண்டி தரிப்பிடத்தில் ஹயருக்கு
எடுத்து வரப்பட்ட முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான முற்சக்கர வண்டியில் கேரளா கஞ்சா கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனையிட்ட போது பௌத்த பிக்குவிடம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் பௌத்த பிக்குவை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள போது தன்னுடைய பெரிய பௌத்த பிக்குவை வரவழைத்து கைது செய்யப்பட்ட பிக்குவை எச்சரித்து விடுவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனாலும் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுட்டால் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

LEAVE A REPLY