மனைவி கொலை கணவருக்கு விளக்கமறியல்

0
181

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தனது மனைவியின் கழுத்தை கத்தரிக்கோலினால் வெட்டி கொலை செய்த கணவரை இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று சனிக்கிழமை மாலை திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.

பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த, நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியின் கழுத்தை
கத்தரிக்கோலால் வெட்டிவிட்டு தனது மடியில் மனைவியை வைத்துக்கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை நீதவான் நேரடியாக சென்று வைத்தியசாலையில் பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY