மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்

0
105

(விசேட நிருபர்)

மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையில் 02.05.2018 செவ்வாய்க்கிழமை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

இரண்டாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கான கண் பரிசோதனை இதன் போது இடம் பெற்றது.

இலங்கையின் சிறந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர் பூ.சிறிகரநாதன் தலைமையிலான குழுவினர் இந்த கண் பரிசோதனை முகாமை நடத்தினர்.

இதில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் ரி.யசோதரன் உட்பட சிவானந்தா தேசிய பாசடாலையின் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிவானந்த விவேகானந்த மாணவர் ஒன்றியத்தின ஏற்பாட்டில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் ககண்பரிசோதனை நடத்தப்பட்டு பார்வை குறைபாடு உடைய மாணவர்களுக்கான இலவச மூக்கு கண்காடிகளை சிவானந்த விவேகானந்த மாணவர் ஒன்றியத்தின் மூலமாக வழங்கப்பட்டன.

இவ்வாறான கண் பரிசோதனைகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கண்டறியப்படுமாயின் அவர்களுக்கான சிகிச்சையினை முறைப்படி வழங்குவதன்மூலம் முற்றாக குணப்படுத்தி விடலாம்

எட்டு வயதிற்குக் குறைந்தவர்களிடம் கண் நோய்கள் அவதானிக்கப்படுமிடத்து முறையான மருத்துவ சிகிநச்சை மூலம் முற்றாகக் குணப்படுத்த முடியும்.எனவும் இவ்வாறு சகல பாடசாலைகளிலும் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே இதனை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியான கண் பரிசோதனைகளை செய்வதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் கண் நோய்களைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என கண் சத்திர சத்திர சிகிச்சை நிபுணர் பூ.சிறிகரநாதன் இதன் போது குறிப்பிட்டார்.

DSC_0523

LEAVE A REPLY