மட்டக்களப்பில் சு.க.வின் மே தின நிகழ்வு: அமைச்சர்கள் குழு மட்டக்களப்பு விஜயம்

0
282

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வுகளின் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்று 02.05.2018 புதன்கிழமை மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.

அமைச்சர்களான நிமால் சிறீபாலடி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உட்பட ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.

இதன் போது அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவடிவேம்பு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கு ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் செங்கலடியிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வை நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் மே தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறுவது இதுவே முதல் தடiவாயகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிக்கு கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியான மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தமையையொட்டி தேசிய மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மாவடிவேம்பு பிரதேசத்தில் நடாத்த தீர்மானித்துள்ளது.

அது தொடர்பான கலந்துரையாடலுக்காக ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா தலைமையிலான அமைச்சர்கள் குழு இங்கு வந்து கட்சியின் மேதினத்தை மிகவும் சிறப்பாக நடாத்துவது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டது.

குறிப்பாக இந்த மே தினத்தில் நாடு பூராகவுமிருந்து 25000க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்.

ஒரு தேசியக் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மே தினத்தை நடாத்துவது இதுவே முதல் தடவையாகும். இதையொட்டி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமைப்படுகின்றோம்.

இதில் சகல இன மக்களும் வேறுபாடுகளுக்கப்பால் இந்த மே தினக் கூட்டத்தை நடாத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

DSCN0052 DSCN0070 IMG-20180502-WA0074

LEAVE A REPLY