தொடரும் யானைகளின் மர்ம சாவு ! யார் காரணம்???

0
205

அநுராதபுரம் – ஹொரவபதான – துடுவ வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய வனவிலங்கு அதிகாரிகளால் இன்று பிற்பகல் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சுமார் 9 அடி உயரமான இந்த யானைக்கு 25 வயது அளவில் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த யானையின் தந்தங்கள் இனந்தெரியதவர்களால் வெட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அநுராதபுரம் – பண்டுலகம வனவிலங்கு மருத்துவ காரியாலயத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த யானை இயற்கையாக இறந்ததா அல்லது தந்ததிற்காக கொலை செய்யப்பட்டதா என்பது தொடர்பில் ஹொரவபதான வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY