வெங்காயம், உ.கிழங்கிற்கு ரூ 40 இறக்குமதி வரி

0
89

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் மீதான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மீது இது வரை ஒரு கிலோகிராமுக்கு ஒரு ரூபாவாக இருந்த குறித்த வரி, ரூ .40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோகிராமுக்கு இது வரை அறவிடப்பட்ட ரூபா 30 விசேட பண்ட வரி, ரூபா 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலை குறைவடைந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் விவசாயிகளின் நலன் கருதி குறித்த முடிவை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

(Thinakaran)

LEAVE A REPLY