திருகோணமலை 2 வீடமைப்புத்திட்டங்களை திறந்து வைக்க்பபட உள்ளன

0
131

(அஷ்ரப் ஏ. சமத்)

திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பிரதேச செயலாளா் பிரிவில் கல்யாணபுரவில் நிர்மாணிக்க்பபட்ட 61வது கிராமமான ”பொகுனுமக” மற்றும் 62வது கிராமமான ”ரண்சிரிகம” ஆகிய மாதிரிக் கிராமங்கள் 2018. மே 04ஆம் திகதி (வெள்ளிக் கிழமை) மு.ப.09.00 மணிக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்படும்.

இந் நிகழ்வில் எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன், பாராளுமன்ற உறுப்பிணா்கள் அப்துல்லா மஹ்ருப், இம்ரான் மஹ்ருப், எம். எஸ். தௌபீக், துறைரத்தினம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுணா் ரோஹித்த போகெல்லாகம ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொள்வாா்கள்.

காலம் சென்ற ஜனாதிபதி ரணசிங் பிரேமதாச அவா்களின் எண்ணக்கருவில் அர்த்தமூட்டும் வகையில் உதாகம” திட்டத்தின் கீழ் நாடுமுழுவதிலும் வீடமைப்புக்கிராமங்களை நடைமுறைப்படுத்தும் ”செமட்ட செவன” தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடமைப்புக் கிராமங்கள் நிர்மாணிக்க்பட்டுள்ளன.

இவ் வீடமைப்புத்திட்டத்தில் பொகுனுகமவில் 25 வீடுகளும் ரண்சிரிகமவில் 24 வீடுகளும் நிர்மாணிக்க்பபட்டுள்ளன. இவ் வீடுகள் நிர்மாணிக்க வென 20 போ்ச் காணித் துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான காணி உரிமைப்பத்திரமும் 49 வீட்டுரிமையாளா்களுக்கும் வழங்கி வைக்கப்படும். வீடுகளை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்களும் வழங்கப்பட்டன. இத்திட்டத்திற்காக 9.21 ஏக்கா் நிலப்பரப்பில் பாதை வசதிகள், குடிநீா், மிண்சாரம் உட்படி சகல அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன இதற்காக 43.7 மில்லியன் ்ருபா அரசினால் செலவழிக்க்பட்டுள்ளது.

இவ் வைபவத்தின்போது. விசிரி வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 100 குடும்பங்களுக்கு 100 இலட்சம் ருபா, வழங்கப்படும். அத்துடன் சொதுரு பியச வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு 100 இலட்சம் ருபா, நிர்மாணத்துறையில் பயிற்சி அளிக்கப்பட்ட மேசன் தச்சுத் தொழிலாளா்கள் 100 பேருக்கான உபகரணங்கள் பொதிகள் கையளித்தல், சிறுநீரக வியாதிகளினால் பாதிக்க்ப்பட்ட 20 நோயாளிகளுக்கு 40 இலட்சம் ருபா வீட்டு உதவித் திட்டம் வழங்கி வைத்தல் , மேலும் வயது முதிா்ந்தோ்களுக்கு மூக்கு கண்னாடி அணிவித்தல் போன்ற நிகழ்வுகளும் அமைச்சா் சஜித் பிரேமதாச மற்றும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்படும்.

LEAVE A REPLY