நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் எதிர்கால கட்டமைப்பு கட்டிட விஸ்தரிப்புகளுக்கான Master Plan வெளியீடு

0
264

IMG-20180503-WA0033நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையானது கடந்த காலங்களில் உரிய முறையில் தயார் செய்யப்பட்ட Master Plan இல்லாமையால் கட்டமைப்பு விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்கியது.

எந்தவொரு செயற்பாடும் அபிவிருத்தியும் உரிய திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ள படுகின்ற போது அதன் மூலம் எதிர்பார்க்கப் படுகின்ற சரியான விளைவுகளை பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான பல்வேறு அனுபவங்கள் மூலம் உணரப்பட்ட Master Plan இன் தேவைப்பாடு பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியினால் இன்று முழு வடிவம் பெற்றுள்ளது.

இப்பிரதான திட்டமிடலினை A. Miqtham Mohammed மற்றும் பொறியியல் குழு வடிவமைத்து வழங்கியுள்ளனர்.

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் எதிர் கால கட்டமைப்புக்களுக்கான திட்டமிடல் கானொளி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் முகப்புத்தக பக்கத்தில் இன்று (03) உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

(Link இணைக்கப் பட்டுள்ளது)

இதற்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நிந்தவூரில் 2010 ஆண்டு உயர்தர மாணவர்களால் நடாத்தப்பட்டு வரும் PRF சமூக சேவை அமைப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

சமீன் முஹம்மது சஹீத்
நிந்தவூர்

IMG-20180503-WA0031 IMG-20180503-WA0032

LEAVE A REPLY