இன்று நாட்டில் கடும் வெப்பம்

0
192

இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை நிலவும் என்ற வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும்இ வட மேல், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடும் வெப்ப காலநிலை காணப்படும் என்றும் இதனால் இதுதொடர்பில் கூடுதலான கவம் செலுத்துமாறு திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அளவில் நீரை பருகவும். முடியுமான வரை நிழல் உள்ள இடங்களில் ஓய்வெடுப்பதுடன் .வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்து அவசியம்.

சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்றும் வெட்ட வெளியில்,அதிகளவில் களைப்படையும் செயற்பாடுகளை குறைத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டு;ள்ளது.

இருப்பினும் நேற்றைதினம் நாட்டின்பெரும்பாலன பிரதேசங்களில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY