வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா?

0
531

அண்மையில் இடம்பெற்ற F8 மாநாட்டில் வட்ஸ்அப் அப்பிளிக்கேஷனில் புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் அறிவித்துள்ளது.

இதன்படி குழு வீடியோ அழைப்பு மற்றும் ஸ்டிக்கர் வசதிகள் உள்ளடக்கப்படவுள்ளன.

அடுத்து வரும் மாதத்தில் இவ் வசதிகளை பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாள்தோறும் 450 மில்லியன் ஆக்டீவ் பயணர்களைக் கொண்டுள்ள வட்ஸ்அப் செயலியின் ஊடாக இரண்டு பில்லியன் நிமிடங்கள் வரையான ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை கருத்தில்கொண்டே வீடியோ கொன்பரன்ஸிங் வசதியும் தரப்பட்டுள்ளது.

இது தவிர தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஈமோஜிக்களுடன் ஸ்டிக்கர்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY