மட்டக்களப்பில் ‘பாடுமீன் சமர்’

0
185

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கும் இடையே ‘பாடுமீன் சமர்’ கிரிக்கெற் சுற்றுப் போட்டி எதிர்வரும் யூன் மாதம் 09, 10ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளதாக, போட்டியின் அனுசரணையாளர்களான எரோ பிறைவேற் லிமிட்டெற் விளம்பர நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிப்கான் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக இப்போட்டி நடைபெற்று வருகின்றது.

குறித்த திகதிகளில் இவ் வருடத்திற்கான இப் போட்டியை நடாத்துதல் தொடர்பில் செவ்வாய்கிழமை (01.05.2018) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஏற்பாட்டாளர்களால் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் கே. பாஸ்கர், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா போன்றோரும் போட்டி நிகழ்வுகள்; தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் எரோ விளம்பர நிறுவனத்தின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Battli (6)

LEAVE A REPLY