சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவர் கிண்ணியாவில் கைது

0
77

(அப்துல் சலாம் யாசீம்)

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குட்டிக்கராச்சி மற்றும் காக்காமுனை பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் செயற்பட்ட இரண்டு பேரை திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றினுள் கஞ்சா கலந்த மதன மோதன லேகியம் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீட்டினை நோதனையிட்ட போது 2 கிலோ 400 கிரேம் கஞ்சா கலந்த மதன மோதன லேகியம் கைப்பற்றப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, காக்காமுனை பகுதியைச்சேர்ந்த எம்.ஆர்.எம்.அப்துல் ஹை (37வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் காக்காமுனையிலிருந்து குட்டிக்கராச்சிக்கு அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற சந்தேக நபருடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் கிண்ணியா, குட்டிக்கராச்சி பகுதியைச்சேர்ந்த எம்.கே.முகம்மட் சிறாஜ் (28வயது) என்பவரை கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தன்.

LEAVE A REPLY