காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் கோர விபத்து : 25 பேர் காயம்

0
854

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல்-வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (30.04.2018) இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கியவர்களில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் வாகனத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளான பஸ் சேதடைந்துள்ள போதும் பஸ்ஸும் எரிபொருள் ஏற்றிவந்த பவுஸரும் தீப்பிடிக்காமையால் மக்கள் பெரும் அனர்த்தத்திலிருந்து காப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-Veerakesari-

WhatsApp Image 2018-05-01 at 06.55.52

LEAVE A REPLY