முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்: இரா.சம்பந்தன்

0
444

Fahmy Mohamed

ஐயா!!!

நாற்பது வருடங்களை சுமார் எனது வயதை உங்கள் அரசியல் அனுபவமாக கொண்டவர்.ஆனால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அல்லது உங்கள் அடிமனதின் வக்கிரத்தை பிரதிபலிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளீர்கள்.

சட்டத்தரணியான உங்களுக்கு இப்படியான மூலைவியாதி உள்ளது சட்டத்த்துறைக்கே ஏலனமாக உள்ளது.நீங்கள் உங்கள் சார்ந்தவர்களை திருப்திப்படுத்த வெளியிட்ட அறிக்கை,,உங்கள் மீது எச்சமாக முஸ்லீம்கள் வைத்திருந்த மரியாதையையும் அழித்துவிட்டது.

வடகிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம் உறவு பேணப்பட வேண்டும்.இதனை வெறுமனே மேடைப் பேச்சாகவே வைத்துள்ளீர்கள்.

வடக்கில் வெளியேற்றப்பட்ட உங்கள் மக்களுக்காக சர்வதேசம்வரை போராடுகிறீர்கள்.ஆனால் நீங்கள் துரத்திவிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்த முஸ்லீம்களுக்கு சொந்த இடத்திற்கு திரும்புவதற்கு தடையாக உள்ளீர்கள்.

கடந்த 5 வருடத்திற்கு மேலாக வடமாகாணசபையை ஆட்சி செய்கிறீர்கள்.குறைந்தது ஒரு முஸ்லீம் நியமனமோ,பாலர்பாடசாளைக்கோ செய்யாது இனவாத அரசியலை நடத்துகிறீர்கள்.

கடந்த 30 வருடங்களாக சொந்த மக்களை ஏமாற்றி நீங்கள் சாதித்தது என்ன தெரியுமா??உங்கள் பதவியை பாதுகாக்க சமூகத்தை பிச்சைக்காரன் புண்போல வைத்து காட்டிக் கொடுத் து நடக்க முடியாத வயதிலும் மற்றவருக்கு விட்டுக் கொடுக்காமல் பதவிக்காக வாழ்கிறீர்கள்.உங்களை கொள்கைவாதி என்பதா??பதவிவெறி பிடித்தவர் என்பதா???யாரை ஏமாற்றுகின்றீர்கள்..

1-போராட்டவீரரான பிரபாகரனை பழிகொடுத்தது
2-ஆயிரம் மக்களின் அநியாயமாகக் கொலைக்கு காரணமாக உள்ளது.
3-உங்களுக்கு எதிரான சகல தமிழ் அரசியல் தலைவர்களையும் LTTEயை வைத்து தீர்த்துக் கட்டியது.உயிர் தப்பிய ஒரேநபர் டக்ளஸ் மட்டமே.எத்தனை
4- 3%வீதமாக இருந்த சிங்களவர்கள் இன்று சுமார் 30%மாக கிழக்கில் அதிகரிக்க வாய்மூடியாக இருந்தவர் யார்.?
5-நீங்கள் எதிர்கட்சித் தலைவரா?தமிழ் மக்கள் தலைவரா?வடகிழக்குக் கட்சித் தலைவரா?

அதுமட்டுமா!!!!தமிழ் மற்றும் முஸ்லீம் உறவை கட்டியெழுப்ப உங்களால் எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இந்த சமூகம் ஒன்றுபட்டால் உங்களது பதவியே இல்லாது போய்விடும் ஐயா!!

சர்வதேச சக்திகள் மற்றும் இந்தியா கூட்டிலே ரணிலை ஆட்சிபீடம் ஏற்றுனீர்கள்.ஆனால் அமைச்சரவையில் சேராத நிழல்அமைச்சராக உள்ளீர்கள்.ஆயிரம் வரப்பிரகாஷம் அனுபவிக்கின்றீர்கள்.ஆனால் வருடக்கணக்கில் சிறைக்கைதிகள்,அங்கவீனர்கள் மற்றும் காணாமல் போன உறவுகளை வைத்து குளிர்காய்கின்றீர்கள்.

தனது சமூகத்தை நெருப்பில் எரியவிட்டு கண்ணாடிக் கூண்டில் இருந்து அழுகின்ற மகாநடிகன் நீங்கள் ஐயா!!

இப்படியாக தன்னுடைய சமூகத்தை கண்ணீரில் விட்டு,முஸ்லீம் சமூகத்தை விரோதியாக பார்க்கின்ற உங்களுக்கு வடகிழக்கு இணைப்புக் கனவு வேறு..

40வருடங்களாக சொந்த இனத்திற்கு எந்தத் தீர்வையும் உருப்படியாக செய்ய முடியாத நீங்கள்,தற்போதைய பிரச்சனைக்கு முஸ்லீம்கள் சாரிகட்ட வேண்டும் என்று நாட்டாமை செய்கிறீர்கள்.

ஐயா!!உங்களுக்கு முஸ்லீம் தலமைகள் சப்பானி போடலாம்.ஆனால் நாங்கள் மடையர்கள் அல்ல.இந்த இருசமூகத்தையும் மோதவிட்டு உங்கள் பதவியை பாதுகாத்துக் கொள்கிறீர்கள்.ஆகவே உங்கள் இனத்திற்கு நீங்கள் விசுவாசமாக இருக்கலாம்.அதற்காக மற்றைய சமூகத்திற்கு நீங்கள் கருத்துக் கூறுவதற்கு அருகதையற்றவர்.

நிறைய எழுதலாம்.ஆனால் உங்களுக்கு நேரத்தை வீணடித்து என் சமூகத்திற்கான நேரத்தை செலவு செய்ய அவசியமில்லை.

கடைசியாக உங்களிடம் முஸ்லீம் தலமைகள் உங்களிடம் சரணடையலாம்.அதற்காக முஸ்லீம் சமூகத்தை அடிமையாக்க கனவுகான வேண்டாம்.நாங்கள் தற்போது விழித்துள்ளோம்.எங்கள் மீது ஒருகீறல் வந்தாலும் திருப்பி அடிப்போம்.எங்களது தலமைகளையும் சேர்த்து அவசியம் வந்தால்!!

நாட்டின் இறமைக்கும் ஒற்றையாட்சிக்கும் விசுவாசமாக இருப்பேன்!!!என்று ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமானம் எடுக்கின்றீர்கள்.ஆனால் தமிழ்ஈழம்,சமஷ்டி மற்றும் சுயாட்சி என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூச்சல் இடுகின்றீர்கள்.இது சோசத் துரோகம் தெரியுமா ஐயா???

நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல,குறைந்தது இலங்கைப் பிரஜையாக இருப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் தகுதியற்றவர்.உங்கள் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்.பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்கள் விடுவிக்கப்பட்டு,உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்.

இறுதியாக பொன்னம்பலம் இராமநாதன் ,தந்தை செல்வநாயகம் முதல் நீங்கள்வரை உங்கள்இனத்திற்காக போராடுகிறீர்கள்.ஆனால் ஏமாறறம் மட்டுமே நிச்சயிக்கப்பட்டதாக உள்ளது. ஆனால் நீங்கள் உண்மையில் புற்றுநோயாக உள்ள உங்களது சமூகத்தின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமானால்,,உங்களின் இனவாதப்போக்கை கைவிடவேண்டும்.

தமிழ்-முஸ்லீம் உறவை உண்மையாகவும்,அர்த்தமுள்ளதாகவும் நிலைநாட்ட வேண்டும்.அதிலும் முஸ்லீம்களை உங்களின் அடிமையாக கருதுகின்ற கள்நெஞ்சப் மனப்பாங்கு மாறாதவரை உங்களுக்கு இந்த நாட்டில் நிரந்தர தீரவுகிடையாது.ஐநாசபை கொழும்பில் முகாமிட்டாலும் முஸ்லீம்களை எதிரியாக்கி ஒருசான் அளவேனும் சாதிக்க முடியாது.

ஒனறுமட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,,வடகிழக்கு இணைப்பு இடம்பெறவே மாட்டாது.சட்டவரம்புகளை மீறிநடந்தால் கிழக்கு முஸ்லீம்களுக்கு தனியாக இருக்க வேண்டும்.எங்களுக்கு அரசியல்ரீதியாக சமபங்கு அதிகாரம்,ஆட்சி தேவை.அதனை மத்தியரசே தரவேண்டும்.உங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நாங்கள் ஒன்றும் உணர்ச்சியற்ற பிச்சைக்கார சமூகம்அல்ல.மீண்டெழுந்தள்ளோம்.திருப்பி அடிப்போம்.

உங்கள் சமூகத்தில் ஆயிரம் பிரச்சனை உள்ளது.உங்களின் துரோகத்திற்காக நீங்கள் அதிகவிலை கொடுத்து அனுபவிக்கின்றீர்கள்.இந்தநிலையில் எங்களுக்கு பஞ்சாயத்து செய்ய வேண்டிய தேவையில்லை.

எங்களுக்கு எங்களின் கலாச்சரம் புனிதமானது.ஒரே இறைவன்,ஒரே தூதர் என்ற கொள்கையில் வாழ்பவர்கள்.நாங்கள் அன்று உங்கள் ஆயுதங்களுக்கு தலைகுணிந்திருக்கலாம்.ஆனால் நெஞ்சில் ஈரமுடனே இருந்தோம்.இது திருப்பி அடிக்கும் எங்கள் தருணம்.எங்கள் கலாச்சாரம் மற்றும் உணர்வுளுடன் மோதவேண்டாம்.

2020 தேர்தலில் உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.இந்த சமூகத்தின் நிழலைக்கூட தொட்டுப் பார்க்க எனது பயணத்தில் உங்களுக்கோ அல்லது உங்களைப் போன்ற நினைப்பில் இருப்பவர்களுக்கோ இடமே இல்லை.

உங்கள் மீண்டும் அடுத்த சதுரங்கத்தில் சந்திப்பேன்

LEAVE A REPLY