காவத்தமுனை வீதி விளக்குகள் சம்பந்தமாக ஓட்டமாவடி புதிய தவிசாளரின் கவனத்திற்கு…

0
174

 -ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்ட காவத்தமுனை கிராமத்தினை ஊடறுத்து செல்லும் பிரதான வீதியானது இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதாகவும் உடனடியாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலையிட்டு அதற்கான தீர்வினை பெற்றுத்தறுமாறு பிரதேச மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

மேலும் குறித்த வீதியில் செயற்பாடற்று காணப்படும் வாழைச்சேனை கடதாசி ஆலையின் பெரும் நிலப்பரப்புடனான காட்டுப்பகுதியில் இருந்து பாம்புகள், விச ஜந்துக்கள் மற்றும் நாய்களின் அச்சுறுத்தல்களையும் அசெளகரியங்களையும் இரவு நேரங்களில் குறித்த வீதியினை அண்டி வாழுபவர்களும், பாதைசாரிகளும் எதிர் கொண்டு வர்பவர்களாக இருந்து வருகின்றனர்.

அத்தோடு குறித்த வீதியினை அண்டிய பிரதேசத்தில் அரசி ஆலைகள் பல இருப்பதினாலும், வயல் நிலங்களுக்கு அதிகமானவர்கள் பயனிக்கும் பாதையாக குறித்த பாதை காணப்படுவதினாலும் நாளந்தம் ஏனைய பிரதேசங்களில் அதிகமானவர்கள் வந்து போகின்ற பாதையாக காணப்படுகின்றது. ஆகவே இம்முறை புதிதாக காவத்தமுனை பிரதேசத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துளைப்போடு புதிய தவிசாளர் துரித கதியில் நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தறுமாறு மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

வீடியோ :- தவிசாளர் ஐ.ரி.அஸ்மியின் கவனத்திற்கு –

LEAVE A REPLY