மட்டு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைந்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

0
193

விசேட நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைந்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஸம்ஸம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு  நேற்றைய முந்தினம் (27) மாலை இடம் பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் வறுமை 19.8 வீதம் இருந்தது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு எடுத்துக் கொண்ட முயற்சியால் 11.5 வீதமான அளவுக்கு வறுமை குறைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சமமான முறையில் வாழ்வாதாரங்களை வழங்கியதன் காரணமாக மாவட்டத்தின் வறுமை குறைக்கும் முதல் படி வெற்றியைக் கண்டுள்ளது என்பது நான் சந்தோசம் கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைக்கலாம் என்ற வேலைத்திட்டம் போன்று எதிர்காலத்தில் இந்த பணியைச் செய்யக் கூடியதாக இருந்தால் 8 வீதமாக வறுமையை குறைக்கலாம் என் நான் நம்புகின்றேன் என்றார்.

ஏறாவூர் ஸம்ஸம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 4.5 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் ஏறாவூர் இணைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப், பிரதேச செயலக திட்டப் பணிப்பாளர் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

02 (1) 03 04 (1) 05 (1)

LEAVE A REPLY