சமையல் எரிவாயு விலை ரூபா 245 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ. 1,676

0
444

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் அதிகார சபை இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (27) நள்ளிரவு முதல் 245 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் சமையல் எரிவாயு விற்பனையில் ஈடுபட்டுள்ள, லிட்ரோ கேஸ் (Litro Gas) மற்றும் லாப் (Laugh) நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

அதன்படி, ரூபா 1,431 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 1,676 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Thinakaran)

LEAVE A REPLY