பிர்தெளஸ் நகரிலிருந்து முதியோர் இல்ல வீதி வரையிலான கடற்கரைதோணா கால்வாய் புனர்நிர்மானம்..!

0
221

காத்தான்குடி பதுறியா 1ம் வட்டார பிர்தெளஸ் நகரிலிருந்து முதியோர் இல்ல வீதி வரையிலான தோணாக் கால்வாய் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழை காலங்களில் தோணாக் கால்வாயை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளிலும் நீர் புகுந்து வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்படுகின்றனர்.

டெலிகொம் வீதியில் அமைந்துள்ள வடிகாண்களுகூடாக வரும் நீரும் தேங்கி நின்று அப்பகுதி மக்களுக்கு பெரிதும் அசெளகரியத்தை எற்படுத்துகின்றன. அப்பகுதி மக்களை இவ் அசெளகரியத்திலிருந்து சுகாதாரமான முறையில் பாதுகாப்பாதற்காக இன்று நகரசபை தவிசாளர் அஸ்பர் அவர்களுடன் இனைந்து நகரசபை உறுப்பினர் அலிசப்ரி அவர்களும் கள விஜயத்தினை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

சில சட்டவிரோத கட்டடங்களும் அங்கே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் உரியவர்களுக்கு எழுத்து மூல ஆவணங்கள் வழங்கப்பட்டு வடிகான்களுக்குரிய 2 மீற்றர் அளவான காணிகள் பெறப்பட்டு எதிர்வரும் மழைகாலங்களில் மழைநீர் சீராக வடிந்தோடுவற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

31357583_200235240703516_1556427054931509248_n 31369285_200235450703495_1277253661000466432_n 31369299_200235004036873_5948838534583418880_n 31369334_200235157370191_1411126369982611456_n

LEAVE A REPLY