வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக போட்டியிடும் எண்ணம் இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

0
59

(பாறுக் ஷிஹான்)

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக போட்டியிடும் எண்ணம் தனக்கில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பிரதான வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறதே என எழுப்பபட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளர்.

அதாவது நான் போட்டியிடுவதாக வந்த செய்திகளில் உண்ணமையில்லை. ஏனெனில் அவ்வாறு போட்டியிடும் எண்ணம் எனக்கும் இல்லை. அதேபோன்று கட்சிக்கும் அவ்வாறானதொரு எண்ணம் கிடையாது என்றே தான் நம்புகிறேன் என்றார்.

LEAVE A REPLY