ஹாபாயா வவிகாரம்: கிண்ணியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
186

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹாபாயா அணிவதற்கு எதிராக இடம் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிண்ணியா வில் இன்று (27) வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர் கிண்ணியா பழைய வைத்தியசாலை ரீ சந்தியில் இடம் பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் செய்திருந்தனர்.

இதில் விடமாட்டோம் விடமாட்டோம் எங்கள் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம், மாறமாட்டோம் மாறமாட்டோம் எங்கள் கலாரசார ஆடையை விட்டு மாறமாட்டோம், சீண்டாதே சீண்டாதே முஸ்லீம்களை சீண்டாதே போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சுலேச்சனா ஜெயபாலன் எனும் சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபரையும் பாடசாலை நிருவாகத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம், இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட சண்முகா பாடசாலை நிருவாகத்தினரையும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு செயற்பட்டமையையும் வன்மையாக கண்டிப்பதாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர்கள் தங்களது கோசங்களை எழுப்பினர். திருமதி கபீர் ஆசிரியைக்கு கடுமையான தொனியில் ஹபாயா ஆடையை அணிவதற்கு தடை விதித்ததையடுத்தே இப்போராட்டம் நடைபெற்றது.

20180427_133140 20180427_133816 20180427_133756

LEAVE A REPLY