சிறந்த கைத்தொழில் மையமாக செம்மண்ணோடை கிராமத்தை மாற்ற அனைவரும் செயற்பட வேண்டும்

0
105

(வாழைச்சேனை நிருபர்)

எதிர்வரும் காலங்களில் சிறந்த கைத்தொழில் மையமாக கொண்ட கிராமமாக செம்மண்ணோடை கிராமத்தை மாற்ற அனைவரும் செயற்பட வேண்டும் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்மண்ணோடை கிராமத்தில் கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று வியாழக்கிழமை செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்க கடடடத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எங்களுடைய பிரதேசம், எங்களது வளம், எங்களுடைய உற்பத்தி எங்களுக்கே வருமானால் சிறப்பானதொரு விடயம். எனவே வெளியில் செல்லும் வருமானத்தை நாங்களே எங்களுடைய தேவைகளுக்கு பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாம் மற்றவர்களிடம் கையேந்துவதை விட நமது சொத்தக் கரங்களில் நின்று நமது பிரதேசங்களை கட்டியெழுப்புவது கட்டாய தேவையாக உள்ளது. சிந்தித்து செயற்பட வேண்டிய தருணங்கள் இருக்கின்றது. எமக்கு கிடைக்கும் வளங்களை கொண்டு தாமே பொருட்களை உற்பத்தி செய்து ஏனையவருக்கு வருமானத்தை பெற்றுக் கொடுப்பதை விட அந்த இலாபத்தை தாமே பெறும் வகையில் முயற்சிக்க வேண்டும்.

எனவே இந்த வேலைத் திட்டத்தினை சரியான முறையில் பயன்படுத்தி உங்களையும், உங்கள் சமூகத்தையும் நல்ல முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும். ஏனைய கைத்தொழிலாளர்களையும் இணைத்து செயற்படுங்கள்.

எதிர்வரும் காலங்களில் சிறந்த கைத்தொழில் மையமாக கொண்ட கிராமமாக செம்மண்ணோடை கிராமத்தை மாற்ற அனைவரும் செயற்பட வேண்டும் என இச்சந்தர்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர், செம்மண்ணோடை கிராம அதிகாரி எம்.எம்.அன்வர் சாதாத், தேசிய சமூக அபிவிருத்தி நிருவனத்தின் இளமானிப் பட்டப்படிப்பளை பயிலும் சமூகப் பணியாளர் ஜே.எப்.நிஹாரா, சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், செயலக உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது செம்மண்ணோடை கிராமத்தில் உள்ள பெண்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், இவற்றினை கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள் கொள்வனவு செய்து கொண்டனர்.

01 (2) 01 (6) (1) 01 (9)

LEAVE A REPLY