104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கியது ஐசிசி

0
196

ஐசிசி கிரிக்கெட் விளையாட்டின் பல்வகை சர்வதேச போட்டிகள் நடத்துவதையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் கிரிக்கெட் கண்காணிப்பாளர்களை நியமிப்பது, சர்வதேச கிரிக்கெட் ஒழுங்கினை நிலைநிறுத்துமாறு ஐசிசி நடத்தை விதிகளை இயற்றி நிர்வகிப்பது, மற்றும் விளையாட்டுகளில் நிலவும் ஊழல், சூதாடல் போன்றவற்றைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகிறது.

இரு நாடுகளிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளையும் உறுப்பினர் நாட்டிற்குள் நடக்கும் உள்போட்டிகளையும் ஐசிசி கட்டுப்படுத்துவதில்லை. கிரிக்கெட் விதிகளையும் எம்சிசி என வழங்கப்படும் மேரில்போன் கிரிக்கெட் கழகமே கட்டுப்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக சீனிவாசனும் (2014-ம் ஆண்டு ஜுன் முதல்), தலைமை செயல் அதிகாரியாக டேவிட் ரிச்சர்ட்சனும் (2012-ம் ஆண்டு முதல்) பணியாற்றி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகள் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் தற்போது சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

இதையடுத்து ஆப்ரிக்கா (22), அமெரிக்கா (17), ஆசியா (21), கிழக்கு ஆசிய- பசிபிக் (11), ஐரோப்பா (34) ஆகிய 104 உறுப்பினர்களும் சர்வதேச டி20 அந்தஸ்து பெற்றுள்ளனர். இதுவரை 18 நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY