அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தல்!

0
113

புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் 49 அமைச்சர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

எனினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

அதேவேளை பெரும்பாலான அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சரவையில் கொண்டிருக்கும் பதவிகளையே தக்கவைத்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY