இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகரச் சபைத்தவிசாளர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவை: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

0
461

(NFGG ஊடகப்பிரிவு)

“கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு செயலாற்றுவதற்கு தயாராக இருப்பதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார். அதே போல் கட்சி பேதங்களின்றி பணியாற்ற வேண்டும் எனஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் தமது உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இவை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்களாகும்.

மக்கள் முழுமையான பிரயோசனத்தை பெறும் வகையில் இக்கருத்துக்கள் செயல் முறையில் நடை முறைப்படுத்தப்படல்வேண்டும்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி நகர சபையின் ஆட்சியினை பொறுப்பேற்றுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நகர சபைத்தவிசாளர்

அல்-ஹாஜ் அஸ்பர் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் , நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

‘உள்ளூராட்சி மன்றங்கள் என்பன மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்துவதனை அடிப்படை நோக்காக கொண்டவைகளாகும். ஜனநாயக அரசியல் சூழலில் இந்த உள்ளூராட்சி மன்றஅதிகாரங்களை கைப்பற்றுவதற்கான தேர்தல்களில் பல கட்சிகளும் , குழுக்களும் போட்டியிடுகின்றன. தமக்குப்பொருத்தமானவர்கள் யார் என்பதை தெரிவு செய்து மக்களும் வாக்களிக்கிறார்கள்.தெரிவு செய்யப்படும் அத்தனை உறுப்பினர்களும் மக்களின் வாக்குகளின் மூலம் அவர்களின் பிரதிநிதிகளாகவே தெரிவு செய்யப்படுகிறார்கள். அத்தோடு, வாக்களிக்கும் சகலரும் தமக்கும் தமது மண்ணுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வாக்களிக்கின்றனர்; வரி செலுத்துகின்றனர்.

அந்த வகையில், தேர்தலின் பின்னர் அமையப் பெறும் சபைகள் இந்நோக்கத்தை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். அதாவது, கட்சி வேறுபாடுகளின்றி மக்களின் நலன்கள் என்ற பொது நோக்கத்திற்காக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். இதனையே எமது கட்சி எப்போதும் வலியுறுத்தி வருகிறது. தேர்தல்களில் வெல்வதற்கான கூட்டணிகள் என்பதை விடவும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வெல்வதற்கான கூட்டு முயற்சிகளே மிகவும் அவசியம் என்பதேஎமது நிலைப்பாடாகும்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் காத்தான்குடி நகர சபை தவிசாளரும் தெரிவித்துள்ள கருத்துக்கள்மிகவும் வரவேற்கப்பட வேண்டியவைகளாகும்.

தமது கட்சி உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வின்போது அறிவுரைகள் பலவற்றை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும்வழங்கியிருந்தார்.

அதில் முக்கியமான ஒன்றாக, தேர்தல்களின் பின்னர் கட்சி பேதங்களை மறந்து விட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்காகபணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். அதே போல் கட்சி அரசியல் வேறு பாடுகளுக்கப்பால் சகலஉறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக நகர சபைத் தவிசாளரும் தற்போது தெரிவித்திருக்கிறார். இவை வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்களாகும். மக்கள் முழுமையான பிரயோசனத்தை பெறும் வகையில் இக்கருத்துக்கள் செயல் முறையில் நடை முறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்காக, எமது கட்சியும் இணைந்து முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது.

அந்த வகையில், காத்தான்குடி நகரசபை , அக்கரைப்பற்று மாநகரசபை உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுள்ள எமது கட்சி இந்த அடிப்படையில் சகலரோடும் இணைந்து பணியாற்ற எப்போதும் தயாராகஇருக்கிறது”

LEAVE A REPLY