மூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு

0
166

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் மிதந்த நிலையில் நேற்று (22) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிளிவெட்டி பாரதிபுரத்தைச் சேர்ந்த குணசேகரம் மங்களதீபன் (வயது 30) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாய்க்காலுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியொன்று கிடப்பதையும் வாய்க்காலில் சடலமொன்று மிதப்பதையும் வயலுக்குச் சென்றவர்கள் அவதானித்ததையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்ட மூதூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குறித்த இளைஞனுக்கு வலிப்பு நோய் உள்ளதென அவரது தந்தை பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளார் எனவும் தெரிய வருகின்றது.

இளைஞன் வலிப்பு வந்து வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY