தலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்

0
360

டெல்லியில் விபத்து மற்றும் தலைக்காய அவசர சிகிச்சைக்காக ‘சுஷ்ருட்டா ட்டிராமா செண்டர்’ என்ற சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறைக்குள் கடந்த வியாழக்கிழமை நுழைந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து, வலது காலில் துளைபோட்டு ஒரு உலோக இணைப்பை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளார்.

201804231717037438_2_delhi02._L_styvpf (1)

மயக்கத்தில் இருந்த நபருக்கு தலைக்கு பதிலாக காலில் ஆபரேஷன் செய்த அந்த ‘மூத்த மேதாவி’ அறுவை சிகிச்சை நிபுணரின் செயல் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது.

அதன்பிறகுதான், அந்த டாக்டர் தவறுதலாக வேறொரு நபருக்கு காலில் ஆபரேஷன் செய்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. தலைக்காய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நபருக்கு காலில் ஆபரேஷன் செய்த விஷயம் தெரியவந்ததும், முன்னர் செய்த ஆபரேஷனுக்கு மாற்று ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது.
201804231717037438_1_Delhi3._L_styvpf

டாக்டரின் இந்த கோளாறு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, பிற டாக்டர்களின் துணை இல்லாமல் அவர் இனி தனியாக ஆபரேஷன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY